பழம் பாளையம் பகுதியில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு
பழம் பாளையம் பகுதியில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பழம் பாளையம் பகுதியில் வசிப்பவர் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த அஜய் ஷர்மா (25) சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறார்.
நேற்றிரவு அஜய் ஷர்மா பழம் பாளையத்திலிருந்து ஈகுவார் பாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அஜய் ஷர்மாவிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.