சிறுவனை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் மூன்று பேர் கைது

Boy Murder Case 3 Persons Arrested கும்மிடிப்பூண்டியில் கள்ளக்காதனுக்காக சிறுவனை கடத்தி கொலை செய்த பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-12-27 03:00 GMT

சிறுவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரேகா, வெங்கடபாலகிருஷ்ணன், ரவனய்யா ஆகியோர். 

Boy Murder Case 3 Persons Arrested

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மாதரபாக்கம் அருகே பல்லவாடா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் - சிந்துமதி தம்பதியரின் மகன் அனீஷ் ஆகியோர் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி அன்று அனீஸ் திடீரென காணாமல் போனார், பெற்றோர்கள் அங்கும், இங்கும் தேடியும் கிடைக்கவில்லை இதன் காரணமாக பெற்றோர்கள் பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த ரேகா என்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இந்த விசாரணையில் ரேகா மாயமான சிறுவனை ஆந்திர மாநிலத்தில் உள்ள வரதயபாளையம் காட்டுப்பகுதியில் கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலமாகியது.இந்த கொலை வழக்கில் ரேகா கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களில் போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட மற்றொரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.இதை தொடர்ந்து போலீசார் நடத்தினர் விசாரணையில் பல்லவாட கிராமத்தை சேர்ந்த மேற்கண்ட தம்பதியர் மற்றும் அருகில் வசித்திருந்த ரேகா-இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும்,ரேகாவுக்கு சொந்த ஊரான வரதயபாளையம் பகுதியில் ஊராட்சி செயலாளராக வெங்கட் பால பாலகிருஷ்ணன் உடன் 2019ம் ஆண்டு இருந்து பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் ரேகா கணவனைப் பிரிந்து மாத கணக்கில் வெங்கடபாலகிருஷ்ணன் சொந்த ஊரான திருப்பதி பகுதியில் வசித்து வந்தார்.

ஆனால் வெங்கடகிருஷ்ணனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் மற்றும் தாய் உள்ளனர் .ரேகா வேலைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார் அப்போது வெங்கடபாலகிருஷ்ணன் என் வீட்டில் வீட்டு வேலை செய்ய திருப்பதிக்கு அழைத்து அங்கு அனைத்து பணிகளையும் செய்துள்ளார்.

இதற்கிடையில் வெங்கடகிருஷ்ணனும்- ரேகாவும் அடிக்கடி உடலுறவு கொள்வதும் இதனால் சில நேரங்களில் வீட்டு வேலை செய்ய முடியாமல் ரேகா சொந்த ஊரான பல்லவாடா பகுதிக்கு வந்து போவது வழக்கம் அப்போது மேற்கண்ட சுரேஷ்- சிந்துமதி மற்றும் அவருடைய பாட்டி ஆகியோர் ரேகாவை பார்த்து அடிக்கடி ஊர் சுற்றுவதும் மினுக்குவதும் போல் சுற்றி திரிகிறாய் என்று எலக்கரமாய் பேசி வந்துள்ளார்கள்.

பின்னர் வெங்கடபாலகிருஷ்ணனின் நண்பர் ஒருவருக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்டுள்ளார்.இந்த தகவலை கள்ளக்காதலி ரேகாவுக்கு கூறியதும் ரேகா வெங்கடகிருஷ்ணனின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளதும் ரேகாவின் மார்பகத்தில் வெங்கட கிருஷ்ணனின் உருவத்தை பச்சை குத்தியது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக பழைய பகையை வைத்து ரேகா கடந்த 17ஆம் தேதி மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த அனிஷ் என்ற சிறுவனை கிறிஸ்துமஸ் விழாவுக்கு போகலாம் என்று தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டு நாயுடு குப்பம் அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது ஆட்டோ இடித்து இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்தது அவ்வழியே வந்த பல்லவாடா பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சிறுவனைப் பார்த்து எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதற்கு ரேகா பஜாருக்கு செல்கிறோம் என சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.

அதைத்தொடர்ந்து ரேகா தன்னுடைய தாய்க்கு கள்ளக்காதலரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவனய்யாவை தொடர்பு கொண்டு வரதய்யா பாளையம் காட்டுப்பகுதிக்கு வரச் சொல்லி இருந்தார்.சம்பவ இடத்திற்கு இரண்டு முறை சென்று பார்த்தபோது ரேகா அங்கு வரவில்லை இதனால் ரவனய்யா வீடு திரும்பினார்.அதன்பின்பு மேற்கண்ட இருசக்கர வாகனம் விபத்து காரணமாக காலதாமதமாக காட்டுப்பகுதிக்கு சென்று ரவனய்யாவை தொலைபேசி எண் தொடர்பு கொண்டார்.வருவதற்குள் நேரமாகியது அப்போது குழந்தை அனீஸ் அழுதபடியே தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கிடையில் காணாமல் போன அனிஷ் பெற்றோர்கள் ரேகாவுடைய கணவரிடம் இது சம்பந்தமாக கூறி சண்டை யிட்டுள்ளனர்.

பின்பு ரேகாவுக்கு தொலைபேசி மூலம் சிறுவனை நீ அழைத்துச் சென்றாயா என தொலைபேசி மேலும் கூறியுள்ளார்.அதற்கு நான் இல்லை என்றும், விஷயம் அனைத்து பகுதி மக்களுக்கு பகுதிகளுக்கும் தெரிந்து விட்டது என பதற்றத்துடன் இருந்தபோது அனீஸ் மீண்டும்,மீண்டும் தொந்தரவு கொடுத்துள்ளார் ஆத்திரமடைந்தரேகா தன் கழுத்தில் இருந்த துப்பட்டாவை எடுத்து அனிஷை கழுத்தை நெருக்கி கொலை செய்து சாக்கு பையில் கட்டி வைத்தாள்.

அப்போது காலதாமதமாக வந்த ரவனய்யா இடம் மேற்கண்ட தகவலை கூறிய போது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். பின்பு கொலை செய்யப்பட்ட சிறுவனை நடுக்காட்டில் வீசினர் வீடு திரும்பிய பின்னர் போலீஸ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து நேற்று முன் தினம் பாதிரிவேடு போலீசார் ரேகா( வயது 32) கள்ளக்காதலன் வெங்கடபால கிருஷ்ணன்( வயது 49),ரவனய்யா ( வயது 57) மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News