கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் கிராமத்தில் சிறுவன் பாம்பு கடித்து இறந்தார்.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தலையாரி பாளையத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனிவேல் இவரது மனைவி ரேகா. இந்த தம்பதியரின் மகன் விஷ்வா (12) இவர் நேற்று காலை வீட்டின் அருகே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த விஷப்பாம்பு சிறுவனை கடித்துள்ளது.
பின்னர் பெற்றோருக்கு தகவலளித்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று முதலுதவிக்கு பின்னர் 108 அவசர ஊர்தியில் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது சிறுவன் உயிரிழந்ததாக அவசர ஊர்தி ஊழியர் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. விஷப்பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.