பா.ஜ.க. வேட்பாளர் பொன் பாலகணபதி பா.ம.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி பாமக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2024-03-25 12:54 GMT

பாமக நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்ட பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி பாமக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார், பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர் ராமதாசை சந்தித்து ஆறத்தழுவியது தேசியமும், சமத்துவ சமூக நீதியும் இணைந்தது போன்றது என பெருமிதத்துடன் கூறினார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன் பாலகணபதி தனது கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாகச் சென்று ஜனப்பன் சத்திரத்தில் அலுவலகத்தில் பாமக நிர்வாகிகளை சந்தித்தார், அப்போது வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வி. எம். பிரகாஷ் நிர்வாகிகளுடன் அவர்களை வரவேற்றார். அப்போது, வேட்பாளர் பொன் பாலகணபதி பாமக நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இதனையடுத்து பாமக நிர்வாகிகளும் பாஜக வேட்பாளருக்கு சால்வை மற்றும் ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பாமக நிர்வாகிகளுக்கு வேட்பாளரை அறிமுகம் செய்து பேசிய மாவட்டச் செயலாளர் வி. எம். பிரகாஷ் மருத்துவர் ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைத்தாலும், யாரை கை காட்டினாலும் அவர்களுடன் இணைந்து தேர்தல் பணி ஆற்ற வேண்டியது கடமை என்றும், தமிழகத்தை பொறுத்தவரை மும்முனைப்போட்டி இருந்தாலும் பாமக கூட்டணி இரண்டாவது இடத்தில் இருப்பது திமுகவினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 பிடித்தும் அதன்பின் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 5 ஆண்டுகள் ஆகியும் ஒன்றும் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டிய வி. எம். பிரகாஷ் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார் செயல்படாதவர் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் ஒரு பொருட்டே அல்ல என கூறினார்.


தொடர்ந்து பேசிய பாஜக வேட்பாளர் பொன் பால கணபதி சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர் ராமதாசை அழைத்து ஆறத் தழுவியதை பார்க்கும்போது தேசியமும், சமத்துவமும் சமூக நீதியும் ஒன்றாக இணைந்தது போன்று இருந்ததாக பெருமிதத்துடன் கூறியவர், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் விவசாய , தொழில், உற்பத்தி ஆகிய மூன்று வளங்கள் இருந்தும் ஆவிகளை ஒன்றாக இணைத்து தொழில் புரட்சி ஏற்படுத்த இதுவரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் ஏதும் செய்யவில்லை எனவும், திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி பாராளுமன்றத்தை பாராத தொகுதியாகவே இதுவரை இருந்து வருவதாகவும் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரது ஆசியுடன் போட்டியிடும் தனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்தும், வாக்கு சேகரித்தும் வெற்றி பெற செய்தால் தொகுதியின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பாமக மாவட்ட தலைவர் எஸ்.வி. ரவி, இளைஞர் அணி செயலாளர் சுதாகர், உள்ளிட்ட நிர்வாகிகளும், இதேபோன்று பாஜக மாநில நிர்வாகிகளான ஆனந்த பிரியா, லோகநாதன், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News