பெத்திக்குப்பம்: இலங்கை அகதிகள் முகாமில் 56 வயது பெண் தீக்குளித்து தற்கொலை
பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 56 வயது பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்த 56 வயது பெண் திடீரென தீக்குளித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.