ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கத்தில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை

ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் 27 ஆம் ஆண்டு சபரிமலை யாத்திரை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது

Update: 2023-11-26 10:04 GMT
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்.

ஊத்துக்கோட்டை அடுத்த லட்சிவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ ஐயப்ப சாமி 27.ஆம் ஆண்டு சபரிமலை யாத்திரை மற்றும் 4ம் ஆண்டு திருவிளக்கு பூஜையில் ஐயப்ப சுவாமி பக்தர்கள், பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி 27 ஆம் ஆண்டு சபரிமலை யாத்திரை முன்னிட்டு நான்காம் ஆண்டு திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன், முருகர், விநாயகர் ,சிவபெருமான், படங்களை வைத்து வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து 18 படிகளுக்கு விளக்குகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று பின்னர்.டிராக்டரில் வண்ண விளக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வான வேடிக்கைகளுடன் கேரள செண்டை மேளத்துடன் கிராம பெண்கள் திருவிளக்கை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது கிராம பொதுமக்கள் ஐயப்பனுக்கு தேங்காய் உடைத்து, தீபாராதனை செய்து வழிபட்டனர். ஐயப்ப குருசாமி செல்லன் முன்னிலையில் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஐயப்ப பக்தர்கள், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஐயப்ப சுவாமியை வழிபட்டனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.


Tags:    

Similar News