கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 3 பேர் காயம்
கும்மிடிப்பூண்டியில், ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரத் கேஸ் நிறுவனத்தின் லீமா கேஸ் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இந்த கேஸ் ஏஜென்சி மூலம் கும்மிடிப்பூண்டியில் உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கேஸ் இணைப்பைப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வருட காலமாக கேஸ் இணைப்பைப் பெற்றவர்களுக்கு மத்திய அரசின் மானியம் நிறுத்தப்பட்ட நிலையில், ஆதார் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு லீமா கேஸ் ஏஜென்சி கூறியுள்ளது. இதனால் மத்திய அரசின் மானியம் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் சில நாட்களாக லீமா கேஸ் ஏஜென்சியில் ஆதார் விவரங்களை தர குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பூதூர் ஊராட்சியில் இருந்து ஆட்டோவில் சுமார் 10 பேர் ஏற்றுக்கொண்டு மேற்கண்ட லீமா கேஸ் ஏஜென்சிக்கு காலை பதிவு செய்ய வந்துள்ளனர். 10 பேர் பதிவு செய்ய ஒரு நாள் முழுவதும் ஆகிய பின்னர் மாலை அனைவரும் அதே ஆட்டோவில் வீடு திரும்பினார்.
அப்போது பெத்திகுப்பத்திலிருந்து மாதர்பாக்கம் செல்லும் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது குறிப்பாக ஈச்சங்காடு மேடு அருகே வந்தபோது ஆட்டோ நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது அதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆட்டோவில் காயமடைந்த நபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்பு மருத்துவர்கள் முதல் உதவி செய்யப்பட்டு சிறிய காயங்கள் என்பதால் இரண்டு மணி நேரத்தில் அவர்கள் வீடு திரும்பினர்.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் லீமா கேஸ் ஏஜென்சி ஆதார் பதிவுக்காக நான்கு இடங்களாகப் பிரித்து இந்த பணிகளை மேற்கொண்டு இருந்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருந்திருக்கும் ஆனால் 61 ஊராட்சிகளில் இருந்து ஒட்டுமொத்தமாக அவசம் அவசரமாக வரும் பொழுது இது போன்ற விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இதனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக வந்து முக்கிய இடங்களில் இந்த ஆதர் பதிவினை ஏற்படுத்தி தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.