கும்மிடிப்பூண்டியில் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டியில் 2 கடைகளில் நடந்த கொள்ளை முயற்சி பற்றி சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Update: 2023-11-17 12:46 GMT
கும்மிடிப்பூண்டி கடையில் நடைபெற்ற கொள்ளை முயற்சி காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

கும்மிடிப்பூண்டியில் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த  சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி காட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சுதாந்த் (வயது 35). இவருக்கு சொந்தமான செல் போன் விற்பனை கடையும், இந்தக் கடை அருகே சுரேஷ் (வயது 47) என்பவருக்கு சொந்தமான ஆண்கள் அழகு நிலையமும் உள்ளது.இந்த நிலையில் வழக்கம் போல கடைக்கு வந்த சுதாகர்,சுரேஷ் கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க பகுதி உடைந்து இருந்தது  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இது தொடர்பாக உடனடியாக கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் மேற்கண்ட கடை உடைப்பு சம்பந்தமாக தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் அங்கு சென்று பார்த்து போது கடையின் ஷட்டர் உடைத்தது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக 5.லட்சம் மதிப்பிலான பொருட்கள் தப்பியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போலீசார் கடையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளைப் பார்த்த போது மூன்று வட மாநில இளைஞர்கள் கடையை உடைக்கும் காட்சி தெளிவாகியுள்ளது. இதன் காரணமாக அருகே உள்ள ரயில் நிலையம் என்பதால் ஆள் நடமாட்டம் இருந்தால் வட மாநில இளைஞர் கண்டு ஓடியது தெரியவந்தது.

இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக பரவியுள்ளது.பின்னர் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளின் கைப்பற்றி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 வட மாநில மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News