கோவில் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட இளைஞரை கொலை செய்ய முயற்சி
கோவில் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட இளைஞரை கொலை செய்ய முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பூரிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்.(32) இவர் தனது நண்பருடன் திரௌபதி அம்மன் கோவில் அருகே மது அருந்தி கொண்டிருந்தார். இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக்(23) என்பவர் கோவில் அருகே மது அருந்தக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து முருகன் திருமுல்லைவாயலை உள்ள தனது நண்பரான சேர்ந்த தினேஷ் பாபு என்பவரை அழைத்து வந்து கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் . இதனை அடுத்து, தினேஷ் கூட்டாளிகளான சரண், கலைச்செல்வன் , மிட்டாய் ரஃபி ஆகியோருடன் முருகன் சரண்ராஜ் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கை பலமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த தகவலறிந்து விரைந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து 4. பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.