சேதமடைந்த மின் கம்பம்: மரக்கட்டைகளை நடவு செய்த பகுதி மக்கள்.
மின் கம்பம் சேதமடைந்ததால், மின் ஒயர்களை தூக்கிப் பிடிக்க மரக்கட்டை மின் கம்பம் நடவு செய்த பகுதி மக்கள்
பெரியபாளையம் அருகே மின்வாரிய அலட்சியப் போக்கால் மின் ஒயர்கள் செல்லும் பாதையில் மின்தம்பங்கள் இல்லாததால் கட்டையால் செய்த மரக்கம்பங்களை அப்பகுதி மக்கள் நடவு செய்தனர். ஆபத்து விளைவிக்கும் முன்பே கம்பங்கள் நடவு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் குமரப்பேட்டை ஊராட்சியில் சுமார் 2,500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சாத்தம்மன் கோவில் பகுதியில் இருந்து கே.ஆர். கண்டிகை கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே சுமார் 20.ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பழுதடைந்து கம்பங்களில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்தபடி ஆபத்தான நிலையில் உள்ளது.
சாலை பொதுமக்கள் நடந்து செல்ல அச்ச படுகின்றனர். மேலும் சில இடங்களில் மின்கம்பங்கள் இல்லாத காரணத்தினால் மின் கம்பிகள் கைக்கெட்டும் நிலையில் தொங்கியபடி காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரியிடம் சென்று மனு அளித்தும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மின்கம்பிகளை கீழே தொங்காதபடி அதனை தாங்கி பிடிப்பதற்கு மரக்கட்டையால் தற்காலிக கம்பங்களை போல் தயார் செய்து நடவு செய்துள்ளனர்.
இது குறித்த பகுதி அப்பகுதிவாசிகள் தெரிவிக்கையில், எங்கள் பகுதியில் சாலை அருகே பழுதடைந்து மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளது.சில இடங்களில் மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது. மின் கம்பங்கள் இல்லாததால் மின் கம்பிகள் கைக்கெட்டும் தூரத்தில் ஆபத்தான முறையில் தொங்குகின்றன. புதிய மின்கம்பங்களை அமைத்து தர பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல பகுதிகளில் பழுதடைந்த கம்பங்களை உள்ளது.
எனவே மின்வாரிய அதிகாரிகள் அவற்றை கண்டறிந்து அவற்றை நீக்கி அதற்கு மாறாக புதிய தம்பங்களை நடவு செய்ய வேண்டும். இல்லையென்றால் பெரிய அளவில் உயிர் சேதம் அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் உயிர்பலி வாங்குவதற்கு முன்பு உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்குமா?