Arani Heavy Rain ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலத்தில் ஆபத்தான பயணம்...நடவடிக்கை தேவை
Arani Heavy Rain ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் தரைப்பாலம் மீது செல்லும் தண்ணீர் ஆபத்தை உணராமல் செல்லும் பொதுமக்கள் உயர்மட்ட மேம்பாலம் கட்டித்தர கோரிக்கை.
Arani Heavy Rain Flood In River
ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புதுப்பாளையம் காரணி இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது இதில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உயர்மட்ட மேம்பாலம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலும் அருகே உள்ள ஆந்திராவிலும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில்.மேலும் மிக்ஜாம் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது அணையின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு கடந்த 4.தேதி காலை 10 மணியளவில் 500 கன அடி உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்த விடப்பட்டது. 5.தேதி அணையின் பாதுகாப்பு கருதி மேலும் 3000 கனஅடியாக உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக அணை வேகமாக நிரம்பிய காரணத்தினால் முன்னறிவிப்பின்றி ஐந்தாம் தேதி நள்ளிரவு 11 மணியளவில் 16 ஆயிரம் கன அடிதிறக்கப் பட்டது இதனால் ஊத்துக்கோட்டை, கொய்யா தோப்பு, அனந்தேரி, சிட்ரபாக்கம்,தாராட்சி, பனப்பாக்கம், ஏனம்பாக்கம், பெரியபாளையம்,ராள்ளபாடி, ஆரணி உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது.
தண்ணீரினால் புதுப்பாளையம்-காரணி இடையே உள்ள தரைப்பாலும் முற்றிலும் தண்ணீர் 5 அடிக்கு மேலாக பாய்ந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. பின்னர் மறுநாள் காலை 7,500 கன அடி ஆக தண்ணீரை குறைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிச்சாட்டூர் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டாலும், நந்தனம் மலைப்பகுதியில் இருந்து ஆரணி ஆற்றுக்கு வரும் தண்ணீரால் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் தரைப்பாலத்தில் தண்ணீர் பாய்கிறது.
10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் செல்வதால் ஆபத்தை உணராமல் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் கடந்த ஆண்டு ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்ட போது மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் அப்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி, நாசர், அன்றைய மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் வர்கீஸ், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ரூபாய் 20.கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் விரைவில் கட்டித் தரப்படும் என தெரிவித்தனர்.ஆனால் தற்போது வரை அப்பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்
ஆரணி ஆற்றின் அருகே புதுப்பாளையம், காரணி, எருக்குவாய், மங்கலம், நெல்வாய், உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 30,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும், இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் வாழ்ந்து வருவதாக தாங்கள் பகுதிகளில் பூக்கள், காய் கனிகள் நெற்பயிர்கள் உள்ளிட்டவை பயிரிட்டு வருகின்றோம், தாங்கள் பகுதியில் விளைவிக்கும் பொருட்களை அறுவடை செய்து இந்த தரைப்பாலம் வழியாக சென்று அஞ்சாத்தம்மன் கோவில் அருகே சென்று அங்கிருந்து பேருந்து மூலம் பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, கோயம்பேடு, திருவள்ளூர், செங்குன்றம், உன்கிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்படும் என்றும், தற்போது இதுபோன்று ஆரணி ஆற்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அவர்கள் விளைவிக்கும் பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாமல் வீணாகி போவதாகவும், இதனால் விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும்,
தெரிவித்தனர்.
இது மட்டுமல்லாமல் மேற்கண்ட கிராமங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த தரைப் பாலம் கடந்து தான் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு சென்று வருவதாகவும், இந்த வெள்ளத்திற்கு காரணத்தினால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதாக இதனால் மிக சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமை நீடித்து வருவதாக தாங்கள் பகுதிக்கு அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்கின்றனர்.
இதுபோன்ற நாட்களில் தாங்கள் யாரையும் கண்டு கொள்வதில்லை என்றும், இதே நிலைமை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருவதாகவும், கடந்த ஆண்டு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தாங்கள் பகுதியில் ஆய்வு செய்து விரைவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டித் தரப்படும் என உறுதி அளித்தும் தற்போது வரை அப்பணிகள் தொடங்கவில்லை என்றும் எனவே மக்கள் நலனை கருதி அடுத்து வரும் மழை வருவதற்கு முன்பாவது ஆரணி ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.