பெரியபாளையம் காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பெரியபாளையம் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெரியபாளையம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜு தலைமை வகித்தார்;

Update: 2022-08-31 00:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு  பேரணி  சென்றனர்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி சென்றனர். பெரியபாளையம் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பெரியபாளையம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜு தலைமை வகித்தார்

பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரசுப் பள்ளியில் தொடங்கிய பேரணி கூட்டுச்சாலை வழியே பேருந்து நிலையம் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. பேரணியில் போதை ஒழிப்பின் அவசியம் மற்றும் போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து  மாணவர்கள் முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து காவல்துறையினர் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகளை மாணவர்களிடம் எடுத்துரைத்தனர் இதில் தலைமை ஆசிரியர் சம்பத், துணை தலைமை ஆசிரியர் அருள்மணி, ஒளிமய உரு வி சிறப்பு துணை ஆய்வாளர் ராஜா, காவலர் அருள் தாஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் குமரவேல்,நாராயண ராவ், பள்ளி வளர்ச்சி மேலாண்மை குழு தலைவர் பத்மாவதி, ஊர்க்காவல் படை சார்ந்த சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்,


Tags:    

Similar News