கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக் கொலை
கும்மிடிப்பூண்டி அருகே நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் மூதாட்டியை கழுத்தறுத்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சானாபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டமநல்லூர் வடக்கு காலனியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (63) இவருக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்து கூலி வேலை, அரசு வழங்கும் ஓய்வூதியம் வைத்துக் கொண்டு சுலோச்சனா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இரவு வீட்டில் தனியாக இருந்த சுலோச்சனா வீட்டிற்கு நான்கு பேர் கொண்ட மரமாக கும்பல் யார் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்து சுலோச்சனாவிடம் இருந்த தங்க நகை உள்ளிட்டவை பறித்துக் கொண்டு சுலோச்சனாவை உடல் கயிற்று உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் வெட்டி உள்ளனர்.
அப்போது மூதாட்டி சுலோச்சனா கூச்சலிட்டதை தொடர்ந்து, இந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து அவர்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பல பகுதிகளில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக இறந்த நிலையில் மூதாட்டி சுலோச்சனா இருந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இத்தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்து கிடந்த சுலோச்சனா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டி சுலோச்சனாவை பணம் நகைக்காக கொலை செய்தாரா அல்லது வேறு ஏது காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கொலைக்கு காரணமான அந்த மர்மன் அவர்கள் வலை வீழ்ச்சி தேடி வருகின்றனர் மூதாட்டியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.