மாநெல்லூரில் முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி: ரூ.5 லட்சம் நிதியுதவி

கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-05-16 02:15 GMT

கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் ஊராட்சியில் பாதிரிவேடு அரசு மேல்நிலைப் பள்ளி 30 வருடங்களுக்கு மேலாகவே தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் மாதர்பாக்கம், பாதிரிவேடு, போந்தவாக்கம், செதில்பாக்கம் பல்லவாடா, நேமலூர், பண்ணுர், ஈகுவார்பாளையம், சித்தூர் நத்தம், மேல்பாக்கம், சானாமுத்தூர், கொண்டமநல்லூர், கண்ணம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் தொடர்ந்து படித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அத்தோடு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிகளுக்கு தேவையான நிதி உதவி செய்யும் வகையில் பணியை 3 ஆண்டுகளாக மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளியை உங்கள் பங்களிப்பை அளித்து அந்தப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக உதவிகளை செய்ய வேண்டும் பேசி இருந்தார்.

தொடர்ந்து மேற்கண்ட பள்ளியில் 1994-95 ஆம் ஆண்டு10.வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 100.க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பள்ளி வளாகத்தில் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு அப்போதிருந்த தலைமையாசிரியர், கணித ஆசிரியர், தமிழ் வாத்தியார் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவின் ஆசிரியர் பெருமக்களை வரவேற்று கௌரவப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், அன்று நிகழ்ந்த நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு ஆசை பெருமக்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிலையில் அந்தப் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளும் வர்ணம் பூசுவதும், குழாய் இணைப்பு ஆகிய 5லட்சம் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிகழ்வு கும்மிடிப்பூண்டி மாநெல்லூர், பதிரிவேடு சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது.

இதுபோன்ற அரசு பள்ளி மாணவர்கள் ஆங்காங்கே தங்கள் படித்த பள்ளி தரம் உயர்த்தவும் போதிய கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News