அ,தி.மு.க., 51ம் ஆண்டு துவக்க விழா
ADMK Latest News in Tamil -அ.தி.மு.க., வின் 51 ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு, எல்லாபுரத்தில் எம்ஜிஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரத்தில் எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு, மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ADMK Latest News in Tamil -அதிமுக 51வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பெரியபாளையம் அருகே வடமதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வரும், கட்சியின் நிறுவன தலைவருமான எம்ஜிஆரால் 1972 ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. அதிமுக கட்சியின் ஐம்பதாவது ஆண்டு, பொன்விழாவை கடந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டடது. 50 ஆவது ஆண்டு பொன் விழாவை நிறைவு செய்து, இன்று 51வது ஆண்டு துவக்கத்தில், அடியெடுத்து வைக்கிறது.
இதை முன்னிட்டு அதிமுக கட்சி தொண்டர்கள், கோலாகலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பட்டாசு வெடித்து, எம்ஜிஆர், அண்ணாத்துரை, ஜெயலலிதா, ஆகிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தும், மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்டங்களை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் மத்திய ஒன்றிய அதிமுக சார்பில், பெரியபாளையம் அடுத்த வடமதுரை ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் உருவச்சிலைக்கு, எல்லாபுரம் மத்திய ஒன்றிய அதிமுக செயலாளர் மகேந்திரன் தலைமையில், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை.ரமேஷ், வடமதுரை ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி கோதண்டன், கிளைச் செயலாளர்கள் பேட்டை மேடு சீனிவாசன், ராமதாஸ், நிர்வாகிகள் தயா, ராஜேஷ், தனசேகர், ராஜீவ் காந்தி, தமிழ் மன்னன்,முருகன், நாகப்பன், சரவணன், புஷ்பராஜ்,ஜெகதீஷ், இளங்கோவன் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2