கும்மிடிப்பூண்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி சாவு

கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரை தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி சடலத்தை மீட்டனர்.

Update: 2022-02-28 02:15 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் கரண் 20. இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழியில் உள்ள தமது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

அங்கு 4 நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கரண் நீண்ட நேரமாகியும் தண்ணீரில் இருந்து வெளியே வராததால் உடன்குளித்த நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ராட்சத மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு 2மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இளைஞர் கரண் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலத்தை கைப்பற்றி கும்மிடிப்பூண்டி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News