கும்மிடிப்பூண்டியில் ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை

கும்மிடிப்பூண்டியில் 501 சிலம்பாட்ட மாணவர்கள் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2023-04-07 02:00 GMT

கும்மிடிப்பூண்டியில் 501 சிலம்பாட்ட மாணவர்கள் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர்.

 திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் பிகே முத்துராமலிங்க சிலம்பக் கழகம் மற்றும் ராமமூர்த்தி சிலம்ப கழகம் இணைந்து நடத்தும் ஒற்றை மற்றும் இரட்டை குச்சி சுழற்றி உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் 3.வயது முதல் 18 வயதுடைய ஆண்,பெண் மாணவர்கள் பங்கேற்று ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 501 சிலம்ப மாணவர்கள் தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

இந்த சாதனை நோபல் புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த உலக சாதனை நிகழ்வானது, 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த உலக சாதனை நிகழ்வு என்பதும், பொன்னேரி, கவரப்பேட்டை, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் சாதனை புரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதில் முத்துராமலிங்கம், இரமேஷ், கண்ணன், மற்றும் முருகானந்தம் கார்த்திக் ஆகியோர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News