கும்மிடிப்பூண்டி அருகே குடியிருப்பு பகுதிகள் புகுந்த கோதுமை நாகம்
கும்மிடிப்பூண்டி அருகே குடியிருப்பு பகுதிகள் புகுந்த கோதுமை நாகத்தை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் ஊராட்சி வெங்கடேஸ்வரா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு சுற்றித் திரிவதை கண்ட அப்பகுதி மக்கள் அலறடித்து ஓடிள்ளனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வெட்டின் அருகே புதர் மண்டிய பகுதியில் உள்ள வளையில் பாம்பு இருப்பதை உறுதி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து வளைக்குள் தண்ணீரை நிரப்பிய தீயணைப்பு வீரர்கள் பின்னர் ரசாயனம் கலந்த தண்ணீரை வளைக்குள் ஊற்றியதையடுத்து வெளியே வந்த அதிக விஷ தன்மை உடைய கோதுமை நகத்தை பாம்பு பிடி கருவியின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் லாவகரமாக பிடித்தனர்.
பிடிபட்ட பாம்பு சுமார் 5 அடி நீளம் இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து பாம்பு பிடி கருவியால் பிடிக்கப்பட்ட கோதுமை நாகத்தை சாக்குப் பையில் பாதுகாப்பாக கொண்டு சென்ற தீயணைப்பு வீரர்கள் நேமலூர் காப்பு காட்டில் பத்திரமாக விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.