பிடிக்க வந்த போலீசாரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயற்சித்த திருடன்
கும்மிடிப்பூண்டி அடுத்த இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் போலீசாரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே மூடப்பட்ட நிலையில் ஏசிஎல் தனியார் தொழிற்சாலையில் பழைய இரும்புகளை திருடுவதற்காக வந்த சிலர் தொழிற்சாலையில் காவல் பணியில் ஈடுபட்டு வந்த வழுதலம் பேடு கிராமத்தைச் சேர்ந்த முத்து (வயது 56) என்பவரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவலர் முத்து அளித்த புகாரின் அடிப்படையில் பெத்திகுப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது தொழிற்சாலை காவலரை தாக்கிய இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராபின்சன் (வயது 36) என்பவரை கைது செய்ய முயற்சித்தபோது, அவர் கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து போலீசார் மீது பாட்டிலால் குத்த முயன்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து தப்பிய ராபின்சன் என்பவரை சிப்காட் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.