கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து

ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்று கொண்டிருந்த மினி வேன் சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2023-10-31 07:30 GMT

தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான மினி வேன்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபலாபுரம் ஊராட்சியின் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழியாக நாள்தோறும் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், தெலுங்கானா, பீகார், ராஜஸ்தான், ஒடிசா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து, மற்றும் தமிழகத்திலிருந்து பல்வேறு கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பொருட்களை லாரிகளில் ஏற்றுக்கொண்டு இச்சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.

பரபரப்பான சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி கஞ்சா, செம்மரம், போதைப் பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்களையும் கடத்திச் செல்லும் வாகனங்களை அவ்வப்போது போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்வதும் மர்ம ஆசாமிகளை கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கமாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை சென்னை-கொல்கத்தா சாலையில் சரக்கு ஏற்றி செல்லும் 407.மினி வேன் ஒன்று சாலையின் இடையே உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கிக் கொண்ட ஓட்டுநரை மீட்டெடுத்தனர். அவர் சிறிய காயங்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான வேனின் கதவை திறந்து பார்த்தபோது அதில் சுமார் 4. டன் எடையுள்ள ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேன் மூலம் கவிழ்ந்து விழுந்த மினி வேலை அப்புறப்படுத்தி விசாரணை செய்தபோது சென்னை, திருவொற்றியூர், மாதவரம், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து டன் கணக்கில் அவை கொண்டு சென்று ஆந்திராவில் விற்பதாக தெரியவந்தது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை பொன்னேரி அருகே உள்ள பஞ்செட்டியில் உள்ள உணவு பொருள் கிடங்கில் ஒப்படைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News