கும்மிடிப்பூண்டி அருகே மேம்பாலத்தின் தடுப்பில் மினி லாரி மோதி விபத்து

கும்மிடிப்பூண்டி அருகே மினி லாரி சாலை தடுப்பில் மோதி ஏற்பட்ட விபத்தில் 3பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-11-22 10:15 GMT

மேம்பாலத்தில் சாலை தடுப்பில் மோதி நின்ற மினி லாரி.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே  சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது மினி லாரி சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதியது. இந்த விபத்தில்  மினி லாரியில் பயணம் செய்த அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்.

சென்னை காசிமேட்டில் இருந்து விற்பனைக்காக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்திற்கு காலை மீன் பெட்டிகளை ஏற்றிக்சென்ற மினி லாரி கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரையொட்டி உள்ள சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அருகில் செல்லும் போது இருபுற சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் முனுசாமி ( வயது 36), வாகனத்தை இயக்கி வந்த நிலையில் பயணம் செய்த வள்ளி.(வயது 55), ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கொடி (வயது 55),மற்றும் கஸ்தூரி ( வயது 50)ஆகிய 3.பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் எவ்வித காயமும் இன்றி தப்பிய நிலையில் காயமடைந்த மூன்று பெண்களும் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்துக்கான காரணம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை நடுவே நடைபெற்ற இந்த விபத்தால் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் வந்து போக்குவரத்தை சீரமைத்த பின்னரே  போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது.

Tags:    

Similar News