6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஐவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 6 கிலோ கஞ்சா பறிமுதல்;
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் சுமார் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.