கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் நடந்த முகாமில் 534 தொழிலாளர்கள் ரத்த தானம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை எஸ்.ஏ.சி எஞ்சின் நிறுவனம் சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 534 பேர் ரத்த தானம் செய்தனர்.;

Update: 2023-08-17 10:01 GMT

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட்டில் நடந்த சிறப்பு ரத்த தான முகாமில் 534பேர் ரத்த தானம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செயல்படும் எஸ்.ஏ.சி எஞ்சின் நிறுவனம், சென்னை தொழில் நகர ரோட்டரி கிளப் இணைந்து கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள சிப்காட் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் ரத்த தான முகாமை நடத்தினர்.

சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எஸ்.ஏ.சி எஞ்சின் தொழிற்சாலை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ரத்ததான முகாம் நடைபெறும். அவ்வாறே இந்த ஆண்டு இந்த தொழிற்சாலை சார்பில் ரத்த தான முகாம் சிப்காட் உற்பத்தியாளர் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அடையார் புற்றுநோய் ரத்த வங்கி, வி.எச்.எஸ். ரத்த வங்கி சார்பில் மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்று ரத்த தானம் தர வந்தவர்களுக்கு உடல் பரிசோதனை செய்து ரத்த தான முாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இந்த ரத்த தான முகாமை எஸ்.ஏ.சி எஞ்ஜின் தொழிற்சாலையின் தொழிற்சாலை இயக்குனர் பி.சுப்பிரமணியன், மனித வள மேலாளர் சதீஷ், ரோட்டரி சங்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்து, ரத்த தானம் செய்தவர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

இந்த முகாமில் எஸ்.ஏ.சி. எஞ்சின் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரியும் 534 பேர் ரத்ததானம் செய்தனர்.

ரத்ததானம் செய்தவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்வதால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும், அவர்கள் தானம் செய்த ரத்தம் எப்படி நோய்வாய்பட்டவர்களுக்கு பயன்படுகிறது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News