புதுகும்மிடிப்பூண்டியில் நீரில் மூழ்கி இறந்த குடும்பங்களுக்கு 5லட்சம் நிவாரணம்
புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் நீரில் மூழ்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 5லட்சம் நிவாரணத்தை அமைச்சர் நாசர் வழங்கினார்.;
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 4 தினங்களுக்கு முன்பு நீரில் மூழ்கி அடுத்தடுத்து பெண் குழந்தைகள் இறந்த நிலையில், அந்த குடும்பங்களுக்கு ரூ. 5லட்சம் நிவாரண உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வழங்கினார். அவருடன் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.