100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த 49 பேர் தேனீக்கள் கொட்டியதில் காயம்

கும்மிடிப்பூண்டி அருகே 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த 49 பேர் தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்தனர்.

Update: 2022-04-05 04:19 GMT
தேனீக்கள் கொட்டியவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புலியூர் ஊராட்சிக்குட்பட்ட அமரம்பேடு கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் 100நாள் வேலையில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஏரிக்கரை பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென காட்டு தேனீக்கள் அவர்களை கொட்டியது.

இதில் 49பேர் காயமடைந்தனர். அவர்கள் 108அம்புலன்ஸ் மற்றும் ட்ராக்டர்கள் மூலம் மாதர்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தேனீக்கள் கொட்டியதால் பலத்த காயமடைந்த 2பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News