கண் சிகிச்சை முகாமில் எம்எல்ஏக்காக நோயாளிகள் 4 மணி நேரம் பரிதவிப்பு
ஊத்துக்கோட்டை நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் எம்எல்ஏக்காக நான்கு மணி நேரம் நோயாளிகள் பரிதவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூர் திமுக சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அரவிந்தா கண் மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டம் பார்வை தடுப்பு சங்கம், ஊத்துக்கோட்டை நகர திமுக இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி எதிரே உள்ள அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள மக்கள் கலந்து 200.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 10 மணி அளவில் நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைப்பதாக இருந்தது.
இந்த நிலையில் அவர் பங்கேற்காததால் மதியம் 1.மணி வரை உணவு இல்லாமலும் ஒரே இடத்தில் அமர்ந்து நோயாளிகள் காத்திருந்தனர். பின்னர் ஒரு மணி அளவில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஜே.மூர்த்தி பங்கேற்று முகாமை துவக்கி வைத்ததால் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.