30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஆரம்பாக்கம் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர அரசு பேருந்தில் சுமார் 30 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கேரளாவை சேர்ந்த 5 பேரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.