சென்னையில் மின்சார ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்
Ganja Seized - சென்னையில் மின்சார ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
Ganja Seized -திருவள்ளூர் மாவட்டம் சூளூர்பேட்டையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் மின்சார ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பெயரில் தனிப்படை துணை ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் போலீசார் அவ்வழியாக செல்லும் ஒவ்வொரு ரயிலிலும் சோதனை நடத்தினர். அப்போது சூலூர் பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது போலீசார் அதில் சோதனை செய்ததில் 14 பிளாஸ்டிக் பொட்டலங்கள் 25 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அஜித்குமார் சரண் (21) கும்மிடிப்பூண்டி மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த கலைவாணன் (34) ஆகியோர் கஞ்சா கடத்தி தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2