கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் 2 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அதிகாரி பாலாஜி பறிமுதல் செய்தார்.

Update: 2023-11-08 09:24 GMT

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி அதிரடி ஆய்வு நடத்தி 2 டன் ரேஷன் அரிசி  மூட்டைகளை  பறிமுதல் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலத்திற்கு சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் தினந்தோறும் டன் கணக்கில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதும் அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வழக்கமாகி உள்ளது. இதையடுத்து சென்னை, திருவொற்றியூர், மீஞ்சூர், பொன்னேரி, பஞ்செட்டி, செங்குன்றம், சோழவரம், பெரியபாளையம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி விலைக்கு வாங்கி அவற்றை பதுக்கி வைத்து ஆந்திராவிற்கு  எடுத்து சென்று விற்று வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட மார்க்கமாக ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திராவுக்கு தொடர்ந்து கடத்துவதாக கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி கும்மிடிப்பூண்டி பைபாஸ்,எளாவூர் சோதனை சாவடி, கும்மிடிப்பூண்டி பஜார், சத்தியவேடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அப்போது சென்னையிலிருந்து சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களை சுமார் ஆறு மணி நேரம் தொடர்ந்து ஒவ்வொரு பெட்டிகளாக ஏரி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் கேட்பாரின்றி கிடந்த சுமார் 2.டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்தார்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை பஞ்செட்டி பகுதியில் உள்ள உணவுப் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பகல் இரவுகளாக குழு மூலம் ரேஷன் அரிசி கடத்துவதை வட்ட வழங்கல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News