கத்தியைக் காட்டி இளம் பெண்ணிடம் 5 சவரன் தங்க நகை பறிப்பு!
சோம்பட்டு கிராமத்தில் இன்று அதிகாலை இளம்பெண் கழுத்தில் கத்தியை காட்டி 5 சவரன் தங்க நகை பறிப்பு -போலீஸ் விசாரணை.;
கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் அவருடைய மனைவி பிரியா இன்று அதிகாலை 3 மணியளவில் கழிவறைக்கு செல்வதற்காக வீட்டிற்கு வெளியே வந்தபோது 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி 5 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இதுகுறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டது.