எளாவூர் சோதனைச் சாவடியில் பேருந்தில் கஞ்சா கடத்த முயன்ற 2 வடமாநில வாலிபர்கள் கைது
எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆரம்பாக்கத்தில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்தை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ஒரிசா மாநிலத்தை சேர்ந்த மிதின் (22) மற்றும் திபு நந்தா (21) ஆகிய 2 வாலிபர்களை செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.