ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் உடல் அவரது பண்ணைத் தோட்டத்தில் அடக்கம்

உடன் பணியாற்றியவர்களை தங்களது குடும்பத்தினரை போல அம்மா பார்த்து கொண்டனர் என உருக்கம்.;

Update: 2020-12-29 00:45 GMT



ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவர்களது வீட்டில் நெருங்கிய உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஐயர்கண்டிகை கிராமத்தில் உள்ள ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோ அமைந்துள்ள பண்ணை தோட்டத்திற்கு அவரது தாயார் கரீமா பேகம் உடல் கொண்டு வரப்பட்டது. இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ட்ரம்ஸ் சிவமணி, தாஜ்னூர் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அங்கு அவர்களது சம்பிரதாயப்படி சடங்குகள் நடந்தன. இதனையடுத்து அவர்களது தோட்டத்தில் தாயாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Tags:    

Similar News