காரை வழிமறித்து ரியல் எஸ்டேட் அதிபரை வெட்ட முயற்சி

பெரியபாளையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் காரை வழி மறித்து அரிவாளால் வெட்ட முயற்சி. கார் கண்ணாடியை உடைத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2020-12-28 03:00 GMT

பெரியபாளையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் காரை வழி மறித்து அரிவாளால் வெட்ட முயற்சித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரை சேர்ந்த கண்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பெரியபாளையம் அருகே அக்கரப்பாக்கம் கிராமத்தை, தனது காரில் கடந்து செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காரை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. காரை திறக்காததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக கண்ணனை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் முன்பகை காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News