அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு
ஆவடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர், சென்னை திரும்பும் வழியில் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார்.;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.4.2022) ஆவடியில், நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சென்னை திரும்பும் வழியில் T1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, வழக்குகளின் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரித்து அறிந்தார்.