புதுக்கோட்டை கிராமத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே ஊருக்குள் அனுமதி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே ஊருக்குள் அனுமதிக்கின்றனர்.;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சிமன்ற நிர்வாகத்தின் தீவிர முயற்சியால் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்த ஊராட்சிக்கு செல்லும் பாதையில் செக்போஸ்ட் அமைத்து, ஊருக்குள் வெளிநபர்களை அனுமதிக்காமல், பால், காய்கறி , பூ வியாபாரம் செய்பவர்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.
மேலும் ஊருக்குள் வருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஊரின் எல்லையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய பிறகு தான் ஊருக்குள் செல்ல அப்பகுதி மக்கள் அனுமதித்து வருகின்றனர்.