மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு..!

மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா திட்ட செயல் விளக்கங்கள் மற்றும் திட்ட பணிகள் குறித்து வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2024-07-06 08:29 GMT

வேளாண் இயக்குனர் ஆய்வின்போது 

மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மண்புழு தொட்டிகள், காளான் வளர்ப்பு கிட்டுகள், நாற்றங்கால் தயாரிக்கும் பிளாஸ்டிக் டிரேக்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் விரட்டும் மருந்துகள் என தலா இரண்டு எண்கள் வரப்பெற்றது. இதற்கான விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வேளாண் துறை இயக்குனர் அய்யம்பெருமாள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அத்திவெட்டி கிராமத்தில் தென்னை இயற்கை விவசாயிகள் குழு தலைவர் வைரவமூர்த்தி மற்றும் செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு மண்புழு உர தொட்டி வழங்கப்பட்டு விவசாயிகளுடன் செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.


மேலும் மதுக்கூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் மாண்புமிகு முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர விதைகள் வேளாண் துணை இயக்குனர் அய்யம்பெருமாள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பிஎம்கிசான் கிட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்துள்ள ‌ விவசாயிகளின் ஆவணங்கள் நேரடியாக விவசாயிகளிடம் ஆய்வு செய்யப்பட்டு பிஎம்கிசான் உதவி தொகைக்கான தகுதியினை ஆய்வு செய்தார்.

பின் குறுவை தொகுப்பு திட்ட பணிகளை வேளாண் உதவி உதவி அலுவலர்கள் தகுதியான விவசாயிகளுக்கு உரிய ஆவணங்களை பரிசீலித்து பின்னேற்பு மானியம் பெற ஆவண செய்ய கேட்டுக் கொண்டார். முன்னோடி விவசாயிகள் ஆலத்தூர் ஜெயஜோதி, பாகம் பிரியாள், பெரிய கோட்டை இளமாறன், மதுரபாசணிபுரம் வெண்ணிலா, அத்திவெட்டி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், ஜெரால்டு, சுரேஷ், தினேஷ், ராமு, முருகேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா அய்யா மணி மற்றும் ராஜு செயல் விளக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி,  வேளாண் அலுவலர் இளங்கோ பிஎம் கிசான் திட்டத்துக்கான ஆய்வின்போது உடனிருந்தனர். 

Tags:    

Similar News