மதுபோதையில் தாயை கொலையை செய்த மகன் கைது
குடிபோதையில் தனது தாயிடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கியதால் அவர் உயிரிழந்தார்;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மேல தெருவைச் சேர்ந்தவர் அஞ்சலையம்மாள்( 70,) இவருடைய கணவர் காசிநாதன். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அஞ்சலையம்மாள் தன்னுடைய மகன் பாவைநாதன் (38) மற்றும் மருமகள் சரண்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தார்.
இந்நிலையில் பாவைநாதன் குடிபோதையில் தனது தாயிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியால் அஞ்சலையம்மாள் இடுப்பில் குத்திக் கீழே தள்ளியுள்ளார். சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் மிதந்த அஞ்சலை அம்மாள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். உடனடியாக அங்கிருந்து அவரது உடலை மீட்டு வீட்டிற்கு எடுத்து வந்து இறுதி சடங்கு செய்ய பாவைநாதன் முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி, பாவைநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.