50 சத மானியவிலையில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்..!

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-26 05:13 GMT

கீழக்குறிச்சியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் அவர்களுக்கு கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் முருகேசன் 50 சத மானியத்தில் விசைதெளிப்பான் வழங்கினார்.

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் கீழக்குறிச்சி ஆவிக்கோட்டை நெம்மேலி. பாவாஜி கோட்டை ஓலயகுன்னம் அண்டமி,கன்னியாகுறிச்சி,பெரியகோட்டை ஆகிய கிராமங்கள் உலக வங்கி கான நீர் ஆதார மேம்பாட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் பொருட்டு நெல் உளுந்து நிலக்கடலை மற்றும் மக்காச்சோளம் குதிரைவாலி போன்ற பயிர்களுக்கு 50% மானியத்தில் விதை முதல் உரத்துடன் கூடிய செயல் விளக்க திடல்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 50 செய்த மானியத்தில் பேட்டரி மூலம் இயங்கும் விசைத்தெளிப்பான்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மண்புழுஉர தொட்டி அமைப்பிலான தார்ப்பாய் தொட்டி தொட்டி அமைக்க தேவையான சவுக்கு குச்சி மற்றும் நிழல் வலை மற்றும் மண்புழு வுடன். ரூ5000 மதிப்புள்ளது 50 சத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் கண்ட கிராமங்களுக்கான வேளாண் உதவி அலுவலகரை அணுகி பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி கேட்டுக்கொள்கிறார்.

Tags:    

Similar News