தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 1.74 கோடி மதிப்பில் மனோரா சுற்றுலாத்தலம் மேம்பாடு
இதன் மூலம் மனோரா சுற்றுலாத் தலம் மேன்மை பெறும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்;
தஞ்சாவூர் மாவட்டம், மனோரா சுற்றுலாதலத்தில் ரூ. 174.46 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு பணிகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சிதுறை சார்பில் சரபோந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் மனோரா சுற்றுலா தலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்று (20.10.2022) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின்னர் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது தெரிவித்ததாவது: இது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனால் கி .பி 1814 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கும் நெப்போலியனுக்கும் நடந்த போரில் ஆங்கிலேயர் வென்றதன் நினைவாக இந்த மனோராவை உருவாக்கினார். 75 அடி உயரம் கொண்ட மனோரா அருங்கோண வடிவில் எட்டு அடுக்குகளை கொண்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், சேதுபாவாசத்திரம் ஊராட்சிஒன்றியம், சரபோந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் மனோராவில் ரூ. 33 இலட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா,சுற்றுலா மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 69.73 இலட்சம் மதிப்பீட்டில் மனோரா கடற்கரையில் கான்கிரீட் படகுத்துறை மறுகட்டுமானம் செய்தல் பணி.
3 விசைப்படகு எஞ்சின், உயிர்க்காக்கும் உடைகள் போன்ற பல்வேறு படகு குழாம் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 18.03 லட்சம் மதிப்பீட்டில் மனோரா கடற்கரையில் கான்கிரீட் படகுதுறைக்கு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, ரூ. 53.70 சரபோந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் மனோரா கிராமத்தில் பயிற்சி மையம் அமைத்து கிராமமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு மனோரா சுற்றுலா தலம் சிறப்பு பணிகள் ரூ. 174.46 இலட்சம் மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு சிறுவர் விளையாட்டு பூங்கா, கடலில் படகு சவாரி, கலங்கரை விளக்கம் போன்றவை பிரசித்தமானது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்பவர்கள் இங்கு வந்து சுற்றி பார்க்கிறார்கள். ஆடி அமாவாசை, ஆடி 18ம் பெருக்கு தினங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகிறார்கள். இதன் மூலம் மனோரா சுற்றுலாத் தலம் மேன்மை பெறும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்றஉறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், மாவட்டஊராட்சிதலைவர் ஆர் உஷா புண்ணியமூர்த்தி, செயற்பொறியாளர் .செல்வராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர் ,வட்டாட்சியர் .ராமச்சந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி. கிருஷ்ணமூர்த்தி, சு.சடையப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.