மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு வேப்பங்கன்றுகள் வழங்கல்..!

மதுக்கூர் வட்டாரத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 100 சத மானியத்தில் வேப்பங்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.;

Update: 2024-07-27 12:26 GMT

மரங்கள் நட்டு தொடங்கி வைத்த மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் திலகவதி.

மதுக்கூர் வட்டாரத்தில் இந்த நிதியாண்டில் தமிழக முதல்வரின் நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டம் செயல்படுத்த வழிமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது மண்ணின் தரத்தை மேம்படுத்துவதையும் சமூகத்தில் நல்வாழ்விற்காக நிலையான மற்றும் வேதிப்பொருட்கள் இல்லாத வேளாண் நடைமுறைகளை நோக்கி நகர்வதை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.


இதன் ஒருபடியாக வேம்பு மரங்களின் சாகுபடியினை ஊக்குவிப்பதற்காக தரமான வேப்பங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மதுக்கூர் வட்டாரத்திற்கு 3750 வேப்பங்கன்றுகள் 100சதவீத மானியத்தில் வழஙக இலக்கு அதன்படி வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் சுஜாதா அவர்களின் வழிகாட்டுதல் படி மதுக்கூர் வட்டார வேளாண் உதவி அலுவலர்கள் ஜெரால்டு சுரேஷ் முருகேஷ் மற்றும் ராமு ஆகியோர் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.


வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வாட்டா குடி உக்கடை ஊராட்சி மன்ற தலைவர் மன்னாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கருப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உலயகுன்னம் ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆலோசனையின் பேரில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்தனர்.

வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் மற்றும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா மற்றும் அய்யா மணி ஆகியோர் வேப்பங்குளம் கிராமத்தில் வேப்பங்கன்றுகள் விவசாயிகள் நடவு செய்த பணியினை ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News