குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் : விவசாயிகள் பயன்பெற அழைப்பு..!

மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.

Update: 2024-07-06 09:58 GMT

ஒலயகுன்னம் கிராமத்தில் குறுவை தொகுப்பு திட்டத்திற்கான சிறப்பு முகாமில் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டது. உடன் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, உதவி அலுவலர் முருகேஷ், அட்மா அலுவலர் சுகிதா மற்றும் ராஜு ஆகியோர் உள்ளனர்.

டெல்டா விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிப்புகளை தொடர்ந்து மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை வட்டாரங்களுக்கு தலா 25 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு உப திட்டங்களுடன் குறுவை தொகுப்பு திட்டம் தஞ்சாவூர் வேளாண்மை இயக்குனர் சுஜாதா வழிகாட்டுதலுடன் குறுவை தொகுப்பு திட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 பொதுவாக தண்ணீர் திறக்க இயலாத நிலையில் போர்வெல் மூலம் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் மோகூர் கிராமத்தில் குறுவை தொகுப்பு திட்ட விண்ணப்ப படிவங்களை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கினார்

வேளாண் உற்பத்தியைப் பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

நெல் பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 4000 வீதம் வழங்கப்பட உள்ளது. நுண்ணூட்டச் சத்து குறைபாடு உள்ள நெல் வயல்களில் நெல் நுண்ணூட்டச் சத்துக் கலவை 50 சத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. அதோடு துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில் சல்பேட் உரம் ஏக்கருக்கு ரூபாய் 250 மானியத்தில் வழங்கப்பட உள்ளது. ஜிப்சம் ஏக்கருக்கு ரூபாய் 250 மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

நெல் சாகுபடி வாய்ப்பு இல்லாத இடங்களில் குறுகிய காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய பயிறு வகை பயிர் சாகுபடி செய்வதற்கு 50சதவீத மானியத்தில் தரமான உளுந்து விதைகள் சூடோமோனஸ் திரவ உயிர் உரம் மற்றும் இடைவெளி வரும் செழிப்பதற்கான பின்னேற்பு மானியத்துடன் ஏக்கருக்கு ரூபாய் 1200 வீதம் வழங்கப்பட உள்ளது.


நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு அடங்கல், கம்ப்யூட்டர் சிட்டா அவர்களுடைய வயல்களில் நின்று லேட்லாங்குடன் கூடிய புகைப்படம், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் மற்றும் எஸ் சி விவசாயிகள் எனில் ஜாதி சான்றிதழ் இரண்டு நகல் போன்றவைகளை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் அல்லது தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர் வசம் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவசாயிகள் ஜூலை 15ம் தேதிக்குள்ளும் தற்போது நாற்றங்கால் நடவு செய்ய 10 தினங்களுக்கு மேலாகும் நிலையில் ஜுலை 25ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உங்களுக்கு வேண்டிய திட்டத்தில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் உடன் பயன் பெற வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

Similar News