நோய் வருமுன் காக்கும் டிரைகோடெர்மாவிரிடி : மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல்
மதுக்கூர் வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு நடைபெற்ற உழவர் வயல்வெளி பள்ளியில் கலந்து கொண்ட கீழக்குறிச்சி மற்றும் உலயகுன்னம் சேர்ந்த 25 விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளிக் கையேடு,கிட்பேக் மற்றும் தலா 2 .5 கிலோ டிரைக்கோடேர்மா விரிடிஎன்னும் உயிரியல் கட்டுப்பாட்டு மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
டி.விரிடி என்ற எதிர்உயிரி மருந்து உளுந்து கடலை எள் மற்றும் தேன்னையில் ஏற்படக்கூடிய வேர்வாடல் நோய், சாறு வடியும் நோய் ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு ஒரு கிலோ வினை ஐம்பது கிலோ மக்கிய எருவுடன் கலந்து வேருக்குஅருகில் இடுவதன் மூலம் நோய் வருமுன் தடுக்க முடியும்.
குறைந்த செலவில் பயிர் பாதுகாப்பு செய்து நிறைவான மகசூல் பெற இயலும். எனவே உழவர் வயல்வெளி பள்ளியில் கற்றுக் கொண்ட விவசாயிகள் சக விவசாயிகளுக்கும் இதன் நன்மைகளை தெரிவித்து பயன்பெற வேண்டும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியினை வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் மற்றும் பயிர் இன்சூரன்ஸ் நிறுவன தாலுகா அலுவலர் மணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா , அய்யாமணி மற்றும் சிசிஅலுவலர் இளமாறன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.