போலீசில் சிக்கிய கொள்ளையர்கள்: தப்பியோட முயன்றபோது 'எலும்பு முறிவு'

பட்டுக்கோட்டையில், போலீசில் சிக்கிய 2 கொள்ளையர்கள் தப்பியோட முயன்ற போது, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.;

Update: 2021-09-29 05:00 GMT
போலீசில் சிக்கிய கொள்ளையர்கள்: தப்பியோட முயன்றபோது எலும்பு முறிவு

தப்பியோட முயன்ற இரு ரவுடிகளில் ஒருவர். 

  • whatsapp icon

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை காவல்துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 8 தனிப்படைகள் அமைத்து 45 ரவுடிகளை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஆட்டோ பாலா என்ற தொடர் கொள்ளையனை, காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நேரம், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது,  கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தது.

இதேபோல் கும்பகோணத்தில், இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களை தாக்கி தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நாச்சியார் கோவிலை சேர்ந்த உச்சாணி என்கின்ற விமல் என்ற கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்தபோது, கீழே விழுந்து கை எலும்பு முறிந்தது. இருவரிடம் இருந்து பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News