அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்: தஞ்சாவூர் ஆட்சியர் தகவல்
பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 576 வீடுகள் கட்டப்பட்டுள்ளன;
தமிழ்நாடு நகர்ப் புறவாழ்விட மேம்பாட்டுவாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம்; பட்டுக்கோட்டை நகராட்சியில்... மகாராஜசமுத்திரம் திட்டப்பகுதியில் 240 (G 2)அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு மேலும் 96 (G 2) அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தகுடியிருப்புகளை ஒதுக்கீடுபெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டுவருமானம் ரூ.3 இலட்சத்திற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.மேலும் சொந்தநிலம் மற்றும் வீடற்றபொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை, உணவுப் பங்கீடு அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மகாராஜசமுத்திரம் திட்டப் பகுதியிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் 28.10.2022 முதல் 02.11.2022 வரைகாலை 10.00மணிமுதல் மாலை 5.00 மணி வரை அணுகி பயன்பெறலாம்.
தகுதியான பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்புத் தொகையாக ரூ.88 ஆயிரத்தை வரை வோலையாக (DD) வாரியத்திற்கு செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8667706982, 8220407667 மற்றும் 8523962235 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில்... கூடநாணல் திட்டப்பகுதியில் 240 (G 2)அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கும் குறைவாக இருத்தல் வேண்டும் மேலும் சொந்தநிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை, உணவுப் பங்கீடுஅட்டைமற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட கூடநாணல் திட்டப்பகுதியிலுள்ள தமிழ்நாடு நகர்ப் புறவாழ்விட மேம்பாட்டுவாரிய அலுவலகத்தை, அலுவலக வேலை நாட்களில் 04.11.2022 முதல் 09.11.2022 வரை காலை 10.00மணி முதல் மாலை 5.00மணி வரை அணுகி பயன்பெறலாம்.
தகுதியானப யனாளிகளுக்கு மாவட்டநிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடுபெற பயனாளி பங்களிப்புத் தொகையாக ரூ.1.50 இலட்சத்தை வரைவோலையாக (DD )வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 8667350694, 9003054184 மற்றும் 8523962235 - என்ற அலைபேசிஎண்களில் தொடர்பு கொள்ளலாம்.