அத்திவெட்டியில் வேளாண் கண்காட்சி..!

மதுக்கூர் அருகே அத்திவெட்டியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2024-04-13 05:32 GMT

வேளாண் கண்காட்சியில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள்.

மதுக்கூர் அருகே அத்திவெட்டி கிராமத்தில் ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் சார்பாக வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அவர்கள் வழிகாட்டுதலின்படி வேளாண் கண்காட்சி, அங்குள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.


இதில் வேளாண் மாணவர்கள் இயற்கை மூலப்பொருள்கள், இரசாயன மூலப்பொருள்கள், உயிரியல் காரணிகள், போன்றவைகளைக் காட்சிப்படுத்தினர். அவை இனக்கவர்ச்சி பொறி, மஞ்சள் அட்டை பொறி, விளக்குப் பொறி. பாரம்பரிய நெல் வகைகள் - சிவப்பு கௌனி, தங்க சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா மற்றும் தென்னையை தாக்கும் பூச்சிகள் - சுருள் வடிவ வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூண் வண்டு, சாம்பல் நிற வண்டு. இயற்கை இடுபொருட்களான பசுந்தாள் உரம், அமிர்த கரைசல், பஞ்சகவ்யம், பூச்சிவிரட்டி மற்றும் தென்னையில் நோய் தாக்கம் - தஞ்சை வாடல் நோய், சாம்பல் கருகல் நோய், தென்னை கரும்பூஞ்சான் நோய் மற்றும் மா, உளுந்து, வேர்கடலை போன்ற பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.


மேலும் நெல் வயலில் வளரும் களைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் இயற்கை தென்னை விவசாய குழுவின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை தஞ்சை ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்டனர்.


இப்பகுதி விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த கண்காட்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பார்வையிட்டனர். விவசாயிகளுக்கு தேவையான விளக்கங்களை ஆர்.வி.எஸ். விவசாயக் கல்லூரி மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News