புதுக்கோட்டை இலுப்பூரில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கொரேனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.;

Update: 2021-05-22 08:15 GMT

கொரோன வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி அத்தியாவசிய பொருட்களை விறப்னை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க கூடாது என்று அறிவித்திருக்கும் நிலையில்

இன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் முழு ஊரடங்கை பின்பற்றாமல் கடைகள் திறந்து விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்ததது.

இலுப்பூர் வட்டாட்சியர் பழனிச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷா ராணி உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா , விதி முறைகளை மீறி செயல்பட்ட ௩ கடைகளை  மூடி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News