புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று குறைந்து வருகிறது, அமைச்சர் ரகுபதி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடந்த கொரோனா தடுபபூசி முகாமை தொடங்கிவைத்து பேசிய அமைச்சர் ரகுபதி மாவட்டத்தில் தொற்று குறைந்து வருவதாக தெரிவித்தார்.;

Update: 2021-05-29 14:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார். அருகில் கலெக்டர் உமாமகேஷ்வரி,

புதுக்கோட்டைமாவட்டம், பொன்னமராவதி அரிமாநகர் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் கோவிட்தடுப்பூசி மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி,சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்  ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தது

தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் பொன்னமராவதி அரிமாநகர் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் கோவிட் தடுப்பூசிமருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவிட் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பொது மக்கள் அனைவரும் தவறாது கோவிட் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு கோவிட் தடுப்பூசிசெலுத்தும் வகையில் மக்களை தேடி தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் தடுப்பூசி போடும் இடங்களை தேடி செல்வதைதவிர்த்து பொது மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கோவிட் தடுப்பூசி மருத்துவமுகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பிறமாவட்டங்களுக்கு முன்னோடியாக ஊராட்சி வாரியாக தடுப்பூசி போடும்பணியினை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. எனவே பொது மக்கள் இது போன்ற கோவிட் தடுப்பூசி முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாளிலிருந்துஅரசின் பல்வேறு துறைகளின் மூலம் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த தொடர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் கோவிட்தொற்று எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கோவிட் நோயாளிகளுக்குசிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் போதுமான படுக்கைவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 650 படுக்கைகளிலும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இங்கு தினமும்5 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு காய்ச்சல் தலைவலி போன்ற கோவிட் அறிகுறிகள் இருந்தால் உடனடியாககோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களின்ஆலோசனைபடி உரிய சிகிச்சை மேற்கொண்டால் பொது மக்கள் கோவிட்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.கோவிட் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் புதுக்கோட்டைமாவட்டமும் ஒன்றாகும்.

இதற்கு காரணமான மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எனவேபொது மக்கள் அனைவரும் தமிழக அரசின் கோவிட் தடுப்பு வழிகாட்டுநெறிமுறைகளை முறையாக பின்பற்றி கோவிட் தொற்றிலிருந்து தங்களைபாதுகாத்துகொள்ள வேண்டும். பேசினார்

Tags:    

Similar News