காட்டுநாவல் ஊராட்சியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா
ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்;
கந்தர்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் ஊராட்சியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவல் ஊராட்சியில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை ஊராட்சி மன்ற தலைவர் ஆரஞ்சு பாப்பா தொடங்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி லட்சுமி வார்டு உறுப்பினர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.
ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கி பேசும்போது மாணவர்கள் கோடை காலத்தில் ஆயிரம் ஆயிரம் திருவிழாவை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவியல் என்பது ஏன்? எதற்கு? எப்படி என்ற வினாக்கள் மூலம் அறிவியல் மனப்பான்மையை வளர்கக்கூடிய வாய்ப்புகளை வானவில் மன்றம் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. மாணவர்கள் கோடைகாலத்தில் உள்ள விடுமுறை நாட்களில் உங்கள் ஊரில் உள்ள நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை வாசிக்க வேண்டும் எனவும்,
ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய அறிவியல் சோதனைகள் மூலம் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அதற்கான வாய்ப்புகளை இல்லம் தேடிக் கல்வி மையம் கோடை காலத்தில் வழங்கிறது என்றும்,மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க தன்னார்வலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இல்லம் தேடி கல்வி செயலியில் எல்.கே.ஜி யு.கே.ஜி ஒன்றாம் வகுப்பு புதிய சேர்க்கும் மாணவர்கள் விபரங்களை பதிவேற்ற வேண்டும் என பேசினார். இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா ஒருங்கிணைத்தார்.
வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தெய்வீக செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, கணித புதிர்கள், ஓரிகாமி மூலம் தொப்பி செய்தல் ,படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை மாணவர்களுக்கு செய்து காண்பித்திருந்தனர்.
இந்நிகழ்வுகளை தன்னார்வலர்கள் சரண்யா, சுமதி ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.ஊர் பொதுமக்கள் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.