என்.எம்.எம்.எஸ் மாதிரித் தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள்
தேர்வில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு என்று அழைக்கப்படும் (என்.எம்.எம்.எஸ்) மாதிரித் தேர்வு நடைபெற்றது.
ஆண்டும் தோறும் தமிழக அரசால் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12 -ஆம் வகுப்பு வரை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
NMMS உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு முக்கிய காரணம், இந்த குழந்தைகளின் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை முடிப்பதை விட அவர்கள் வேலை செய்து சம்பளம் பெறுவது நல்லது என்று முடிவு செய்து கல்வியை புறக்கணிக்கிறார்கள். இத்தகைய பலவீனமான பொருளாதார பின்னணியைக் கொண்ட திறமையான மாணவர்களுக்கு இரண்டாம் நிலை மட்டத்தில் தேவையான பயிற்சி கிடைக்கச் செய்வதை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் ஒரு முன்முயற்சியே நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம் ஆகும். இந்திய அரசு இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மே 2008 -இல் அறிமுகப்படுத்தியது. இதுவரை NMMS உதவித் தொகையானது 100,000 -ம் சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சிபட்டி நடுநிலைப்பள்ளியில் என்.எம்.எம்.எஸ் தேர்வு எழுதுவதற் கான முன்னோட்டமாக மாதிரித் தேர்வு நடத்தப்பெற்றது.இத்தேர்வினை தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார்.தேர்விற்கான பயிற்சியை கணித பட்டதாரி ஆசிரியயை மணிமேகலை அளித்து வருகிறார். தேர்விற்கான ஒருங்கிணைப்பு பணியை ஆசிரியர்கள் ரகமதுல்லா, ஆனந்தராஜ் செய்திருந்தனர்.
இத்தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. படிப்பறிவுத் திறன் தேர்வு , மனத் திறன் தேர்வு என இரண்டு பகுதிகளை கொண்டு 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். மனத்திறன் தேர்வில் விடுப்பட்ட எண்கள், கணக்கு புதிர்கள், விடுப்பட்ட எழுத்தை கண்டுப்பிடிக்க வேண்டும். எண் குறியீடு, தனித்த எழுத்து வார்த்தைகளை மாற்று, படத்தில் விடுப்பட்ட பகுதியைக் கண்டறிதல், படங்களின் கண்ணாடி பிம்பம் என வினாக்கள் கேட்கப்படும்.
படிப்பறிவுத் தேர்வில் அறிவியல், சமூக அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து இந்தியாவின் திட்ட நேரம், உலோக போலிகள், குவி,குழி ஆடிகள், வைரஸை சுற்றியுள்ள உறை, தாவர உலகத்தின் இருவாழ்விகள், லைசோசோம், மின்னூட்டத்தின் அலகு உள்ளிட்ட வினாக்கள் இடம்பெற்றி ருந்தன.
தேர்வு குறித்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் வழங்கிய போது எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளான டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி. எஸ்.எஸ்.சி, ரயில்வே, வங்கி பணி உள்ளிட்ட எழுதுவதற்கு முன்னோட்டமாக இருக்கும் எனவும் ,மாணவ, மாணவிகள் அனைத்து வினாக்களையும் படித்து உள்வாங்கிக் கொண்டு விடை அளிக்க வேண்டும் எனவும அறிவுரை வழங்கப்பட்டது. தேர்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி,செல்வி ஜாய், தனலெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.