காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த கோரிக்கை

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்

Update: 2022-02-21 07:15 GMT

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டும் என     மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள்   மனு அளித்தனர்


காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டைஉள்ளிட்ட 7 மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2006ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி 287 கோடி ரூபாய் செலவில் கரூர் மாயனூரில் அணை கட்டப்படும் என்று அறிவித்து அந்த 2008ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

பின்னர் இந்தத் திட்டம் செயல்படாமல் இருந்த நிலையில் விவசாயிகள் தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு 700 கோடி ரூபாய் நிதியை முதற்கட்டமாக ஒதுக்கியது பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டது.

 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள குன்னத்தூரில் புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 6941 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

மேலும் காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் ஆனது முதற்கட்டமாக திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 118.45 கிலோ மீட்டர் தூரம் காவிரியில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, இந்தத் திட்டம் செயல்படுத்தினால் புதுக்கோட்டை திருச்சி கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 18 ஆயிரத்து 566 ஹெக்டர் விவசாய நிலங்களும் ஆயிரக்கணக்கான ஏரி குளம் கண்மாய்களும் முதற்கட்டமாக பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் அவசரஅவசரமாக காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியது. அந்தப் பணி அடிக்கல் நாட்டிய பிறகு நடைபெறாமல் இருந்தது. அடிக்கல் நாட்டப்பட்டு வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கிய இடமான குன்னத்தூரிலிருந்து தற்போது வரை ஒரு சில கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை அருகே குன்றாண்டார் கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட வாழமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான கால்வாய் வெட்டுவதற்காக அதிகாரிகள் அந்த பகுதியில் நிலத்தை அளக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் குடியிருப்பு வீடுகளுக்குள் இந்த கால்வாய் ஆனது வரக் கூடிய நிலை உள்ள இடத்தை அதிகாரிகள் அளவை எடுத்து சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள்  காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக வாய்க்கால் வெட்டும் பணி அதிகாரிகள் அளவீடு செய்த இடத்தில் வெட்டினால் அந்த பகுதியில் உள்ள 50 குடியிருப்பு வீடுகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள தேவாலயம் உள்ளிட்டவைகள் முழுமையாக இடிபடும் என்றும் காவிரி -வைகை -குண்டாறு  இணைப்புத் திட்டம் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய திட்டம். ஆனால் குடியிருப்பு வீடுகள் பாதிக்காதவாறு மாற்றுப் பாதையில் இந்த வாய்க்காலை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர்.

Tags:    

Similar News